கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டுமென தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது. 2021ஆம் அண்டு கூட்டணி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி கேப்டன் தான் முடிவு செய்து அறிவிப்பார் என்றவர் தொடர்ந்து...வேல் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்த அவர், “பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரையை அவர்களின் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த வித பயனும் இல்லை” என கருத்து தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்கப்படுகிறது. இதில் பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்தும், நானும் கொரோனா குறித்து நேரடியாக உணர்ந்து இருக்கிறோம். எனவே ஒட்டுமொத்த மக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.