கோயம்பேடு சந்தையில் சற்றே குறைந்த காய்கறி விலை

கோயம்பேடு சந்தையில் சற்றே குறைந்த காய்கறி விலை
கோயம்பேடு சந்தையில் சற்றே குறைந்த காய்கறி விலை
Published on

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மொத்த விற்பனையில் விலை சற்று குறைந்து இருக்கிறது.

கடந்த சில தினங்களாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தன் காரணமாக விலை சற்று குறைந்து இருக்கிறது. நவீன தக்காளி கிலோ 60 ரூபாயாகவும், இதுவே சில்லறை விற்பனையில் பொதுமக்களுக்கு நேரடியாக 80 ரூபாய்க்கும் கிடைக்கிறது. அதேபோல் நாட்டு தக்காளி கோயம்பேட்டில் 50 ரூபாயாகவும், பொதுமக்கள் நேரடியாக பெற 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் 80 சதவீதம் நாட்டு தக்காளிதான் விற்பனை செய்யப்படுகிறது. 50 லாரிகளில் 800 டன் தக்காளி வரத்து உள்ளதாகவும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து இன்னும் விலைகுறைய வாய்ப்பு இருப்பதாகவும் மொத்த வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் ஒரு சில காய்கறி விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது. மொத்த விலையில் கேரட் - 75 ரூபாய், உஜிலி கத்திரிக்காய் - 90 ரூபாய், வெண்டக்காய், அவரைக்காய் - தலா 70 ரூபாய், முருங்கைக்காய் - 170 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகளுக்கும் பெரும் அளவு விற்பனை குறைந்து இருப்பதாக கூறுகின்றனர். தொடர் மழை பாதிப்புகள், வரத்து இல்லாததால்தான் விலை குறையவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com