மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், புதிய தலைமுறை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்வை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
அப்படி புதிய தலைமுறை மற்றும் திண்டுக்கல் PSNA college of Engineering and Technology இணைந்து நடத்தும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி, ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் கடந்த 31.08.2024 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சசிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் வேலு மாணிக்கம் பள்ளி தலைவர் கதிரேசன், PSNA பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் காளிதாஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைந்து, 250க்கு மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தின. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வேலுமாணிக்கம், பள்ளியின் தாளாளர் ராஜு மற்றும் முதல்வர் பரிமளா ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜூனியர் பிரிவில் கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹரி வரதன் மற்றும் கரண் அவர்களும், சீனியர் பிரிவில் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஸ் பிரணவ் மற்றும் விஷால் முதல் பரிசை வென்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.