காஞ்சிபுரம் |புதிய தலைமுறையின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி - மாணவ, மாணவிகள் உற்சாகம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ’புதிய தலைமுறை’ சார்பில் ’வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி
காஞ்சிபுரம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சிஎக்ஸ் தளம்
Published on

புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி பதினோராவது ஆண்டாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ’புதிய தலைமுறை’ சார்பில் ’வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் டாக்டர். கே.பிச்சாண்டி எம்.இ.,பிஎச்.டி., தேர்வுக் கட்டுப்பாட்டாளர், SVCE ஆகியோரால் துவக்கிவைக்கப்பட்டது.

இதில் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த கண்டுபிடிப்புகளுக்கு ’புதிய தலைமுறை’யின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயனும், ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் செயலாளர் சிவனந்தமும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

இதையும் படிக்க: காற்றில் கலந்த உயிர் | ”ஒரு போரால் எங்கள் காதல் முறிந்தது”.. வைரலாகும் ரத்தன் டாடாவின் காதல் கதை!

காஞ்சிபுரம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி
ராமநாதபுரம் : ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இளநிலை பிரிவில், பஞ்சாயத்து யூனியன் Middle Schoolஐச் சார்ந்த மாணவிகள் சி.தாரணி மற்றும் மோ.ரித்திகா முதல் பரிசை வென்றனர். முதுநிலை பிரிவில், அரசு மேல்நிலைப் பள்ளி, சிறுகளத்தூரைச் சார்ந்த மாணாக்கர்கள் ஜி.ஜீவானந்தம் மற்றும் என்.ஏ.அமீர் ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த கண்டுபிடிப்புகளுக்கு ’புதிய தலைமுறை’யின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயனும், ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் செயலாளர் சிவனந்தமும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: PAK Vs ENG|ஒரே டெஸ்ட் போட்டி.. கதகளி ஆடிய இரு இங்கிலாந்து வீரர்கள்.. பல சாதனைகள் படைத்த ஹாரி புரூக்!

காஞ்சிபுரம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி
பெரம்பலூர் : ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com