புதிய தலைமுறை மற்றும் ஆக்ஸாலிஸ் பன்னாட்டு பள்ளி இணைந்து நடத்தும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி கடந்த 28.08.2024 அன்று கள்ளக்குறிச்சியில் தொடங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த தச்சுரில் அமைந்துள்ள ஆக்ஸாலிஸ் பன்னாட்டு பள்ளியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியானது தொடங்கியது.
நிகழ்ச்சியினை பாரதி கல்வி நிறுவன தலைவர் பரத் குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். மாவட்டத்தில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் இந்நிகழ்ச்சியினை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
புதிய தலைமுறை மற்றும் ஆக்ஸாலிஸ் பன்னாட்டு பள்ளி இணைந்து நடத்தும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் M.S. பிரசாந்த் அவர்கள் பரிசினை வழங்கினார்.
இளநிலை பிரிவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியை சார்ந்த மாணவன் v. ஹரி மணி வெற்றி பெற்றார்.
முதுநிலை பிரிவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த பஞ்சாயத்து ஸ்ரீ சாரதா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி சார்ந்த மாணவன் B. சரவணகுமார் மற்றும் S. ஷைகுல் அக்பர் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
நிகழ்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.