திண்டுக்கல் | ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

திண்டுக்கலில் PSNA பொறியியல் கல்லூரியில் நடந்த வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 50 க்கும் பள்ளிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் புதிய தலைமுறை
Published on

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தி வருகின்றனர்.

அப்படி திண்டுக்கலில் PSNA பொறியியல் கல்லூரியில் நடந்த வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சியை கலால் துறை உதவி ஆணையாளர் பால் பாண்டி, PSNA கல்லூரி முதல்வர் வாசுதேவன், துணை பதிவாளர் விஜய் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை மாணாக்கர்கள் காட்சி படுத்தியிருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு PSNA பொறியியல் கல்லூரியன் தலைவர் திரு ரகுராம், முதல்வர் வாசுதேவன், இணை பதிவாளர் விஜய் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

திண்டுக்கல்
சேலம்: ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

சேரன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் சுகோதரன் மற்றும் வருண் ஆகியோர் இளநிலை பிரிவிலும்,

அச்சித்த அகாடமியின் பழனிவேல் ராஜன் மற்றும் மோகன் ராகுல் ஆகியோர் முதுநிலை பிரிவிலும் முதலிடம் பெற்றனர்.

திண்டுக்கல்
கள்ளக்குறிச்சி: ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com