கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக வீராணம் ஏரியின் கொள்ளளவான 47.5 அடியில் 45 அடி அளவுக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. இதையடுத்து ஏரியிலிருந்து விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எம்சி சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மதகுகளை தொடங்கி வைத்தனர்.
32 மதகுகளின் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் பயனாக காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.