வீரமங்கை வேலுநாச்சியார்: மதுரையில் அரங்கேற்றப்பட்ட இசையார்ந்த நாட்டிய நாடகம்

வீரமங்கை வேலுநாச்சியார்: மதுரையில் அரங்கேற்றப்பட்ட இசையார்ந்த நாட்டிய நாடகம்
வீரமங்கை வேலுநாச்சியார்: மதுரையில் அரங்கேற்றப்பட்ட இசையார்ந்த நாட்டிய நாடகம்
Published on

மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்.

மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாடகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து கண்டு ரசித்தனர்.

வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார் மருது சகோசேகாதரர்கள் ஆதரவுடனும். ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். இதைத் தொடர்ந்து 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 1796 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலை பண்பாட்டுத் துறை, மூலம் ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் மாண்புமிகு முதலைமச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சங்கம் வளர்ந்த மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் நாடக கலைஞர்கள் காவிய கதைகள் குறித்தும் வண்ண வண்ண ஒளியில் வசனங்கள் பின்னணியில் உயிரூட்டும் இசையுடன் நடனம் சேர்ந்து செய்த கலவையாய், மறைக்கப்பட்ட சுதந்திர வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கிவைக்கபட்டு தமிழகமெங்கும் காட்சிபப்டுத்தப்படுகிறது இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கேடசன் , பூமிநாதன் மாநகராட்சி துணை மேயர் .நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com