பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் வேண்டும் - திருமாவளவன்

பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் வேண்டும் - திருமாவளவன்
பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் வேண்டும் - திருமாவளவன்
Published on

பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வனங்களை பயன்படுத்த பழங்குடி இன மக்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்ற வன உரிமைகள் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நேற்று உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், காட்டுப் பகுதிகளில் வசிக்கும் உரிமை ரத்தான மக்கள் உடனடியாக காடுகளை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் 16 மாநிலங்கள் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் தாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வனப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக அவசர சட்டம் ஒன்றை இயற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இந்த தீர்ப்பால் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த மக்கள் தமது வனப்பகுதிகளைவிட்டு விரட்டப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. 

பழங்குடியினரை வனப்பகுதிகளிலிருந்து விரட்ட வேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்ட வேண்டும் என திட்டமிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் சதிசெய்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதற்கு உதவுவதாக அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர் சுமார் 10 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com