புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
கேள்வி: ராமர் கோவில் திறப்புவிழா விமர்சையாக நடத்தப்பட்டுள்ளது. உங்களது விமர்சனங்கள் மிகக்கூர்மையாக உள்ளது. இந்த அளவிற்கு கூர்மையாக ஒரு ஆன்மீக விழாவை விமர்சிக்க வேண்டுமா?
பதில்: இந்து சமூகத்தை சார்ந்த மக்களின் உணர்வுகளை நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. உலகம் தழுவிய அளவில் கடவுள் நம்பிக்கைகள் நிலைத்திருக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது மனித குலத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கிறது. அதைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இதில் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாஜக, ஆர் எஸ் எஸ் உருவாவதற்கு முன்பே மோடி, அமித்ஷா ராமர் பற்றிய கருத்துருவாக்கம் நிலைபெற்றிருக்கிறது. ராமாயண நாடகங்கள் நடத்தப்படாத கிராமங்களே இந்தியாவில் இல்லை. ராமர் பெயர் சூட்டப்படாத குழந்தைகளே இந்துச் சமூகத்தில் இல்லை. ராமர் மயம் இந்தியா முழுவதும் நீண்ட காலமாக இருக்கிறது. இதை ஆர்.எஸ்.எஸ். தான் செய்தது என நான் சொல்லவில்லை. ஆனால் இந்த உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிற முயற்சியை ஆர்.எஸ்.எஸ். தொடர்ச்சியாக செய்கிறது.
முழு காணொளியும் செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.