சாகித்ய அகாடமி விருது பெற்றார் வண்ணதாசன்

சாகித்ய அகாடமி விருது பெற்றார் வண்ணதாசன்
சாகித்ய அகாடமி விருது பெற்றார் வண்ணதாசன்
Published on

2016 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது புகழ் பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு‌ வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிறு இசை என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதினை அவர் பெற்றார்.

கல்யாணசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட வண்ணதாசன் நெல்லையை சேர்ந்தவர். இவர், மறைந்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் ஆவர். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை, கவிதை, புதினம் என இலக்கிய உலகில் தமது தனித்துவமான படைப்புகளில் வாசகர்களை கவர்ந்து வருபவர்.

கவிதைகளை மட்டும் கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார். 1960-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இன்று வரையிலும் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வருபவர். தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, நடுகை, உயரப்பறத்தல், ஒளியிலே தெரிவது, ஒரு சிறு இசை ஆகியவை அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com