வந்தே மாதரம் சமஸ்கிருத பாடல் என்றும், அது வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமை வழங்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசு உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சமீபத்தில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு, வங்கம், உருது, மராத்தி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கேள்விக்கு வீரமணி என்பவர் வங்க மொழி என்ற விடையை எழுதிய நிலையில், தேர்வு வாரியம் வெளியிட்ட விடைக்குறிப்பில் சமஸ்கிருதம் என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வீரமணி, ’வங்க மொழி என நான் எழுதிய பதிலுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு விசாராணைக்கு ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, வந்தேமாதரம் சமஸ்கிருத பாடல் தான் என பதிலளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி தீர்ப்பை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.