"உயர் கல்வித்துறை அமைச்சர், கவர்னர் உடனான மோதல் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது" – வானதி சீனிவாசன்

“சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசமுற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Vanathi srinivasan
Vanathi srinivasanpt desk
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவை வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

“அமைச்சர்கள் வாய்ப்பிருந்தால் கோவைக்கு வரும்போது எனது தொகுதிக்கும் வர வேண்டும்”

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... “சட்டமன்றத்தில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்துள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள். அமைச்சர்கள் வாய்ப்பிருந்தால் கோவைக்கு வரும் போது எனது தொகுதிக்கும் வர வேண்டும்.

TN Assembly
TN Assemblyகோப்புப்படம்

சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசமுற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடீயோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள்.

“இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை தடுக்க வேண்டும்”

மேட்டுபாளையம், கோத்தகிரி சாலையில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் இந்தியா ஒழிக என்று எழுதுகிறார்கள். இது கண்டிக்கதக்கது.

மத்திய மாநில அரசுக்கு பல முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், இது போன்று இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை தடுக்க வேண்டும். திமுக அரசு ஊக்குவிக்க கூடாது.

Vanathi srinivasan
சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு இனி செக் - டெக்னலாஜியுடன் களமிறங்கும் போலீஸ்

30 நாட்களுக்கும் மேலாக நடக்கும் மானிய கோரிக்கை இந்த முறை 8 நாட்களுக்குள் முடிவடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகம் போன்ற மிக முக்கியமான மாநிலத்திற்கு இந்த நாட்கள் போதது. இன்னும் மக்களின் பிரச்னையை ஆழமாக விவாதிக்க வேண்டும். எதிர்கட்சிகள் பேசும் போது அதிக குறிக்கீடுகள் உள்ளது. சட்டமன்றத்தில் தொகுதி மக்களுக்காக பேசும் வீடியோவை கூட தர மறுக்கிறார்கள். ஜனநாயகத் தன்மையோடு இயங்காத சட்டப் பேரவையில் சவாலோடு பேச வேண்டியதாக இருக்கிறது.

விஜய் குறித்து...

நல்ல தலைவர்கள் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று, நடிகர் விஜய சொன்னதில் மாற்றுக் கருத்தில்லை. படித்தவர்களை விட மக்களுக்காக உணர்வு பூர்வமாக உழைக்கக் கூடியவர்கள் அரசியலில் தேவை.

vijay
vijayot desj

சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால், அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

Vanathi srinivasan
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை - சாதக, பாதகங்கள் என்ன?

3 சட்டத்திருத்தங்கள் குறித்து...

மத்திய அரசு கால சூழலுக்கு ஏற்றவாறு சட்ட திருத்தங்கள் கொண்டுவந்திருந்தாலும், பெயரை இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழி தெரியாகவர்களுக்கு சில வார்த்தைகளை பயன் படுத்துவதில் சிரமம் உள்ளது. இதை மத்திய தலைமையிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். சட்டத்தில் இன்று பல திருத்தங்கள் தேவை.

புதிய குற்றவியல் சட்டங்கள்
புதிய குற்றவியல் சட்டங்கள்pt web

உயர் கல்வித்துறை அமைச்சர் - ஆளுநர் இடையேயான சிக்கல் குறித்து...

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர், கவர்னருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எதிரான மனநிலையோடு பேசுவது உயர்கல்வித் துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நீயா நானா என்ற வகையில் மாநில அரசு ஆளுநர் பேச்சுகளை எடுத்துக் கொள்கிறது. கவர்னர் பொது வெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்திற்கு எதிராக பேசுவதாக எடுத்துக்கொண்டு, அவருக்கு எதிராக பேசுகின்றனர். இது உயர்கல்வித் துறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

Vanathi srinivasan
அடிக்கடி வேலை மாறுபவர்களா நீங்கள்... இனி சுலபமா பணம் எடுக்கலாம்..!

“கிக்-தான் முக்கியமென திராவிட மாடலில் நினைக்கிறார்கள்”

திராவிட மாடலில் கிக்-தான் முக்கிய என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பரபரப்பாக பிரேக்கிங் செய்தி வரக்கூடிய பிரச்னைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

தொடர்ந்து அவரிடம் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்பிற்கு செல்வதாக வெளியாகும் தகவல் குறித்து கேட்டபோது, "எனக்கும் அது குறித்து தெரியவில்லை. அவரிடம் இன்னும் அது பற்றி பேசவில்லை" என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com