பாஜக எம்எல்ஏக்களை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமர்சித்த நிலையில், வானதி சீனிவாசன் அதற்கு பதில் அளித்துள்ளார்.
அதில் ”நடமாடும் வாகனத்தின் மூலமாக எங்களது தொகுதி மக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றால், ‘முதலமைச்சரின் காப்பீடு திட்டம்தான் செல்லும், அதனை எடுத்துகொண்டு வாருங்கள்’ என்று கூறுகின்றனர்.
ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு, இப்படி கூறிய மருத்துவமனைகள்தான் இதே காப்பீடு திட்டத்தினை அனுமதித்தனர்.
சட்டப்பேரவையில் எனக்கு இரண்டு இருக்கைக்கு முன்பு அமர்ந்திருக்கும் ஈஸ்வரனுக்கு நாங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நன்றாக தெரியும். எங்களது தொகுதி மக்களிடத்தில் கேட்டால் நாங்கள் அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்றும் தெரியும். அதேபோல எம்.எல்.ஏ-க்கள் கொடுக்கும் கோரிக்கைகளை அவரது கூட்டணியில் இருக்கும் மாநில அரசாங்கம் எப்படி அனுகுகின்றனர் என்பதும் அவருக்கே தெரியும். அவருக்கும் அந்த அனுபவம் உள்ளது. அவர் பயன்படுத்துன வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை” என தெரிவித்தார்.