தவெக நிர்வாகிகள் மீது வேன் ஓட்டுனர்கள் புகார் - காரணம் என்ன?

த.வெ.க மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுனர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், த.வெ.க நிர்வாகி பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தவெக நிர்வாகிகள் மீது வேன் ஓட்டுனர்கள் புகார்
தவெக நிர்வாகிகள் மீது வேன் ஓட்டுனர்கள் புகார்pt desk
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 ஆம் தேதி நடந்தது. அந்த கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் தொண்டர்கள் வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்து கலந்து கொண்டனர்.

தவெக நிர்வாகிகள் மீது வேன் ஓட்டுனர்கள் புகார்
தவெக நிர்வாகிகள் மீது வேன் ஓட்டுனர்கள் புகார்pt desk

இந்த நிலையில், மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வந்த வேன் ஓட்டுனர்கள் திடீரென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரை அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளனர். அதில், “நாங்கள் ஆக்டிவ் ஓட்டுனர்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் அபிராமபுரம் பகுதி துணைச் செயலாளர் மோகன் என்பவர் எங்களை அணுகி தவெக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என எங்களை அழைத்ததார்.

தவெக நிர்வாகிகள் மீது வேன் ஓட்டுனர்கள் புகார்
தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சம்பளத்தொகை பேசி விட்டு சென்றோம். 27 ஆம் தேதி தொண்டர்களை அழைத்து கொண்டு மாநாட்டிற்கு செல்லும் போதே வாகனத்திற்குள் தொண்டர்கள் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை நாங்கள் மாநாட்டில் இறக்கி விட்டோம். ஆனால் தவெக நிர்வாகி மோகன் கூறியபடி சாப்பாடு எதுவும் வாங்கித் தரவில்லை. மாநாடு முடிந்து அனைவரையும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தோம். இதன் பிறகு மோகன், தான் கூறிய படி சம்பள தொகை தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார்.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்KIRANSA

மேலும் ஆட்களை வைத்து தாக்க முயன்றார். தவெகவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் எங்களை ஆபாசமாக திட்டி விரட்டினார். இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மோகன், சுதாகர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக நிர்வாகிகள் மீது வேன் ஓட்டுனர்கள் புகார்
தவெகவுடன் அதிமுக கூட்டணியா? திண்டுக்கல் சீனிவாசன் பதில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com