கோவை மாவட்டம் வால்பாறையில் மரத்தில் சிக்கிக்கொண்டு வலியால் துடித்த கரடிக்கு வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தனர்.
தேயிலை தோட்டத்தில் மரத்தில் இருந்து கரடி ஒன்று தொடர்ந்து அதிக சத்தம் எழுப்பியுள்ளது. வனத்துறையினர் சென்று பார்த்தப்போது கரடியின் கை மரக்கிளையில் சிக்கி இறங்க முடியாமல் தவித்தது தெரியவந்தது. பின்னர் மரத்தை அடிப்பகுதியில் வெட்டி சாய்த்து கரடிக்கு மயக்க மருந்து செலுத்தி பிடித்து கூண்டில் ஏற்றினர். மேலும் கரடிக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர் காயம் சரியானதும் வனப்பகுதியில் விடப்படும் என கூறினர்.