வேளாண் கடனை வசூலிக்க கந்துவட்டிக்காரர்களை போல வங்கிகள் நடப்பது ஏற்புடையதல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை போம்பையில் வங்கி ஏஜெண்டுகள் தாக்கியதில் பாதிக்கப்பட்ட விவசாயி ஞானசேகரன் என்பவர் உயிரிழந்தார். டிராக்டருக்கு வாங்கிய கடனுக்காக வங்கி ஏஜெண்டுகள் விவசாயியை தாக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயி ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும். ஆந்திரா, தெலங்கானா, உத்திரப்பிரதேசத்தை போல் தமிழக அரசும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.