முல்லைப் பெரியாறு அணை பிரச்னை மற்றும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக திருமண விழாவில் வைகோ பேச்சு.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய வைக்கோ முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
தற்பபோது வரை கேரளா அரசு புதிய அணை கட்டுவதாக தகவல் தெரிவித்து வருகின்றது. அவ்வாறு கேரளா அரசு புதிய அணையை கட்டினால் அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் மேலும் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்தினால் முல்லைப் பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணை என இரு அணைகளும் உடைந்து தண்ணீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டு இரண்டு மாநிலங்களுமே அழிவிற்கு செல்லும் அபாய நிலை ஏற்படும் சூழ்நிலை நிலவும்.
எனவே நியூட்ரினோ ஆய்வு மையத்தையும், கேரள அரசு புதிதாக அணை கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மீண்டும் தேனி மாவட்டத்தில் நடை பயணம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்தார்.
மேலும் திருமண விழாவில் கழக செயல் தலைவர் துரை வைகோ, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்,முன்னாள் எம்.பி.செல்வேந்திரன் மற்றும் தி.மு.க வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட ம.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.