செய்தியாளர்: சு.சௌந்திரநாதன்
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன. இதில் வைகை அணையில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாத நிலையில், சிவகங்கை மாவட்ட திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழை நீர் வைகை ஆற்றில் சேர்கிறது.
வைகை ஆற்றின் குறுக்கே அருப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி இரு கரைகளையும் தொட்டு மழை நீர் ஆர்ப்பரித்துச் சென்ற வண்ணம் உள்ளது. இந்த மழை மேலும் 10 நாட்கள் தொடர்ந்தால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்வதுடன், அருகில் உள்ள கண்மாய்கள் நிரம்பும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் கண்கவரும் கழுகுப்பார்வை காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.