தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ’அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக்கொள்வோம்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதுவும், கடந்த ஒரு வருடமாக உலகம் முழுக்க கொரோனா பரவி தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்படாமல் லட்சக்கணக்கானவர்கள் இறந்தனர். தற்போதுதான், பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று தடுப்பூசி தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் #COVID19 பிடியிலிருந்து நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ள, எவ்வித தயக்கமும் இன்றி, அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக் கொள்வோம். தவறாமல் முகக்கவசமும் அணிவோம். கொரோனாவை வெல்வோம்” என்று விழிப்புணர்வூட்டியிருக்கிறார். ஏற்கனவே, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி மு.க ஸ்டாலின் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.