கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள்
கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள்pt web

வாழை |வேலைகள்தான் வேறுவேறு.. மாணவர்களின் வலி ஒன்றுதான்.. ’பருக்கை’ நாவலாசிரியர் பகிர்ந்த அனுபவங்கள்!

இதில் குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட வேலைகளுக்குத்தான் செல்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை இந்த வேலைக்கு செல்கிறார்கள்.
Published on

விடுதி மாணவர்கள் வலி பேசும் பருக்கை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அத்துடன் வாழை திரைப்படம் மிகப்பெரிய பேசுபொருளை உருவாக்கி இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் கிராமப் புற மாணவர்கள், விடுமுறை நாட்களில் தங்களது பகுதிகளில் கிடைக்கும் வேலைகளை செய்து பணம் ஈட்டுவர். சிவகாசி என்றால் பட்டாசு ஆலைகள், தீக்குச்சி தொழிற்சாலைகள், திருநெல்வேலி என்றால் விவசாயம் சார்ந்த வேலைகள் என வேலைகளில் ஈடுபடுவார்கள்.

இது ஒருபுறம் இருக்க அனைத்து பகுதிகளிலும் பரவலாக இருப்பது கல்லூரி மாணவர்கள் கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேராசிரியர் வீரபாண்டி
பேராசிரியர் வீரபாண்டி

கல்லூரி மாணவர்கள் கேட்டரிங் தொழிலில் ஈடுபடுவதையே மையமாக வைத்து ‘பருக்கை’ என்ற நாவலை எழுதியுள்ளார் எழுத்தாளர் வீரபாண்டி. சென்னை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவர் SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராயம் விருதினையும் பெற்றவர். பருக்கை புதினம் சாகித்திய அகாதெமியின் ’யுவ புரஸ்கார்’ விருதினையும் வென்றுள்ளார்.

கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள்
“அவர்கள் எவ்வளவு கோழைத்தனமானவர்கள்” ராஜினாமா செய்த மோகன்லால் உள்ளிட்டோரை காட்டமாக விமர்சித்த பார்வதி

அதிகம் வேலைக்கு செல்லும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்

அவரிடம், கல்லூரிக்கு கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு செல்லும் மாணவர்கள் பகுதி நேர வேலைகள் செய்வது தொடர்பாக கேட்டோம். வருத்தங்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “முழுக்க முழுக்க கல்விக் கனவுகளுடன் சென்னை, கோவை என பெருநகரங்களை நோக்கி செல்லும் கிராமப்புற மாணவர்கள் கல்விக் கட்டணம், அடிப்படை தேவைகளுக்கான செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்றால் பகுதிநேர வேலையை தேடிக் கொள்கிறார்கள். வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சுதந்திரம் உருவாகிவிடுகிறது.

இதில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இம்மாதிரி வேலைக்கு செல்வதில்லை. சிலர் செல்லலாம். ஆனால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களே அதிகளவில் வேலைக்குச் செல்கிறார்கள். இந்த வேலையின் மூலம் தங்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைகின்றன. ஊதியம் யாரை விட்டது? தொடச்சியாக வேலைகளுக்கு செல்கிறார்கள். தங்களது வீடுகளுக்கும் கொடுக்கிறார்கள்.

கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள்
மலையாள சினிமாவை சுழன்றடிக்கும் பாலியல் புகார்கள்; மௌனம் காக்கும் தமிழ் நட்சத்திரங்கள்! நடப்பது என்ன?

உணவு தொடர்பான வேலைகளுக்கு அதிகம் செல்லும் மாணவர்கள்

இதில் குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட வேலைகளுக்குத்தான் செல்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை இந்த வேலைக்கு செல்கிறார்கள். கேட்டரிங் சென்றால் சாப்பாட்டு பிரச்னை தீர்ந்துவிடும். நல்ல உணவே அவர்களுக்கு கிடைக்கிறது. சாப்பாட்டிற்காக அலைவது, சாப்பாட்டிற்கு செலவு செய்ய முடியாமல் இருப்பது, செலவு செய்தாலும் நல்ல உணவு கிடைக்காமல் இருப்பது என்பன போன்ற பிரச்னைகள் இல்லை. இரவு வேலை செய்துவிட்டு மறுநாளும் வேலை செய்ய வேண்டும் என்பதால் அந்த இரவு மண்டபத்தில் தங்கிக் கொள்ளக் கூடிய வசதியும் கிடைக்கிறது.

மாதத்திற்கு 6 முதல் 10 நாட்கள் வேலை செய்தாலே அவர்களுக்கு அந்த மாதத்திற்கு தேவையான பணம் கிடைத்துவிடுகிறது. மாணவர்கள் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்கள் என்றால் 15 வரை கூட செல்வார்கள்.

கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள்
வாழை: “என்னுடைய கதை...10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன்” எழுத்தாளர் சோ.தர்மன்

கல்வி மனநிலையில் இருந்து நகர்ந்துவிடும் மாணவர்கள்

மாணவிகளும் இதில் வேலை செய்கிறார்கள். வரவேற்பில் நிற்க இம்மாதிரியான சில வேலைகளில் மாணவிகள் ஈடுபடுகின்றனர். படித்து சாதிப்பதற்குத்தான் வெளிநகரங்களுக்கு வந்து, அதற்காக வேலைகளுக்கு சென்று கஷ்டப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் நாம் கஷ்டப்படுவது எதற்காக என்பதையே பெரும்பாலான மாணவர்கள் மறந்துவிடுகிறார்கள். கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து நகர்ந்து சென்றுவிடுகிறார்கள். அரசு கொடுக்கும் 1000 ரூபாய் மிகப்பெரிய அளவில் உதவிடாது என்றாலும், அடிப்படை தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

உணவு மற்றும் இருப்பிட வசதியை அரசு நன்றாக ஏற்படுத்திக் கொடுத்தால் மாணவர்கள் ஏன் இப்படி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படப்போகிறது. மாணவர்களும் வந்தோம், கடமைக்கு டிகிரி முடித்தோம், தேறிவிட்டோம் என்ற நிலையில் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றனர்.

கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள்
"வாழையடி சிறுகதை அருமை! எழுத்தாளர் சோ.தர்மனுக்கு நன்றி" தனது பாணியில் ரிப்ளை கொடுத்த மாரி செல்வராஜ்!

வேலைக்கென்றே நகரங்களுக்கு வருபவர்கள், கஷ்டங்களை பழகிக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், படிக்கவரும் மாணவர்களை அப்படி விட்டுவிடக் கூடாது இல்லையா? படிக்க வரும் மாணவர்கள் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக வேலைக்கு சென்று வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது இல்லையா?” என்றார் வேதனையுடன்...

கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள்
“ஒரு சமூகத்தின் உயிர்வலி - வாழை” - மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று வாழ்த்திய திருமாவளவன் எம்.பி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com