கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
Published on

கரூரில் கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பம் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூரைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர், இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பச் செலவுக்காக 40 ஆயிரம் ரூபாய் கந்துவட்டியாக கடன் பெற்றுள்ளார். அந்தப் பணத்தை திரும்ப செலுத்தும்படி, கந்துவட்டிக்காரர்கள் அந்தோணிராஜுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்தோணிராஜ், தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் வேளையில், இந்தத் தீக்குளிப்பு முயற்சி நடந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில‌ பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com