நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உரிமம் பெற்ற 22 ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உரிமம் பெற்ற 22 ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உரிமம் பெற்ற 22 ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
Published on

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் உள்ள 2,700 துப்பாக்கிகள் உட்பட 22 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல் ஆணையர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் சமயங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களது துப்பாக்கிகளை தற்காலிகமாக காவல் நிலையங்களில் ஒப்படைப்பது சட்ட நடைமுறை. அதன்படி தமிழகத்தில் சொந்த பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பார்கள் காவல்துறை அனுமதியோடு உரிய உரிமம் பெற்று வாங்கப்படும் இந்த துப்பாக்கிகள் தேர்தல் நேரங்களில் காவல்துறை கேட்கும்போது கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் உரிமம் பெற்று வைத்துள்ள 22 ஆயிரம் துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல சென்னையை பொருத்தவரை 2700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com