நெல்லை மாவட்டத்தில் நேற்று வரலாறு காணாத மழையானது பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் 6,167 மி.மீ மழையானது நெல்லையில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 50,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் வெள்ளமானது தேங்கியுள்ளது. இதனால் அதிகாரிகளும் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலையானது ஏற்பட்டுள்ளது.
பெருக்கெடுத்து ஓடும் மழைநீரின் காரணமாக பொதுமக்கள் தங்களது உடைமைகளை இழந்து, உணவுகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
24 மணி நேரத்தினை கடந்து பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக அப்பகுதிகளை சுற்றிலும் மின் இணைப்பானது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்கள் அனைத்திலும் 200 க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவுகளும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.