தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சென்ற ஜூலை மாதத்தில் 4.8 சதவிகிதமாக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் நிறுவனமான சிஎம்ஐஇ (CMIE) கணித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவிகிதமாக இருந்ததாக சிஎம்ஐஇ (CMIE) தெரிவித்துள்ளது. அதேபோல, இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.17 சதவிகிதத்திலிருந்து 6.95 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.30 சதவிகிதமாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.34 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. பொதுமுடக்க தளர்வுகளைத் தொடர்ந்து பல்வேறு துறை நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியதே வேலைவாய்ப்பின்மை விகிதம் குறையக் காரணமாகக் கூறப்படுகிறது.