உயிர் பலி ஏற்பட்டால்தான் ஒவ்வொரு விஷயத்திலும் அரசு நடவடிக்கை எடுக்குமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. ஆழ்துளைக் கிணறுகளில் பயனில் உள்ளவை எத்தனை? மூடப்படாதவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், விதிமீறி ஆழ்துளைக் கிணறு அமைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.
அத்துடன், ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக வருகிற 21-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.