மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 36 மணிநேரத்திற்குத் தொடர்ச்சியாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாமல் மழை பெய்த சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்று இரவு முதல் மழை குறைந்து இன்று காலை முதல் வெயில் அடிக்க துவங்கியுள்ளது. மழை நின்ற போதும் மக்கள் படும் துயரங்கள் நின்றபாடில்லை. அரசு தரப்பில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தபோதும் பல இடங்களில் தங்களுக்கு இன்னும் உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்து வருகின்றன. பல இடங்களில் வீடுகள், கடைகள், சாலைகளை இன்னும் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளன. வெள்ளநீர் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. தன்னார்வலர்கள் பலரும் மீட்பு பணிகளில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர சென்னை தவிர பிற மாவட்டங்களும் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில், தேங்கிய வெள்ளத்தில், இறந்தவர் உடலை அடக்கம் செய்யமுடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோவை இங்கே காணவும்.