உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி நிர்வாகம் 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து 25 நாட்களாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று கைகளில் தீச்சட்டி ஏந்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தங்கள் வேலைகளை பறித்து போனஸ் தராமல் ஏமாற்றியும், பொய் வழக்கு போட்டு தங்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுங்க நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும் தங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்க்கும் போக்கை கண்டித்தும் 100க்கு மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களுக்கு வசூல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்கலாமே: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் போராட்டம்