அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லையா? போன் பண்ணுங்க.. - உதயநிதி ஸ்டாலின்

அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லையா? போன் பண்ணுங்க.. - உதயநிதி ஸ்டாலின்
அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லையா? போன் பண்ணுங்க.. - உதயநிதி ஸ்டாலின்
Published on

அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோருக்கு உதவ திமுக இளைஞரணி சார்பில் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் உலக அளவில் கொரோனாவுக்கு சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 756 பேர் இறந்ததால் அங்கு மொத்த உயிரிழப்பு 10, 778 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 821 பேர் இறந்ததால் ஸ்பெயினில் உயிரிழப்பு 6,803 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 255 பேர் இறந்ததால் அமெரிக்காவில் உயிரிழப்பு 2,475 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 18,276 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,41,854 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் 81,439, ஸ்பெயினில் 80,110, ஜெர்மனியில் 62,095, பிரான்சில் 40,174, ஈரானில் 38,309, பிரிட்டனில் 19,522, சிங்கப்பூரில் 844, பாகிஸ்தானில் 1,597, இலங்கையில் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கூட்டங்கள் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றன. இதனிடையே மண்டல வாரியாக ஆதரவற்றோருக்கும் பணியில் இருப்பவர்களுக்கும் உணவு வழங்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், கறிக்கடைகள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு நேற்றிலிருந்து அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பேரிடரால் மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில். அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் 93618 63559 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்... உங்களுக்கு உதவ தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com