இளைஞரணி செயலாளர் to துணை முதலமைச்சர்.. மு.க. ஸ்டாலின் vs உதயநிதி ஒப்பீடு!

திமுக அரசின் துணை முதலமைச்சராக, அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்PT
Published on

திமுக இளைஞரணிச் செயலாளராகவும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற குரல் சமீப நாட்களாக திமுக நிர்வாகிகள் இடையே அதிகமாக இருந்துவந்தது. இதுகுறித்து பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து சூசகமாக பேசிய உதயநிதி ஸ்டாலின், “பொறுப்புகள் மாறுவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்” எனக் கூறியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்ற “கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “உங்களுக்கும் மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கிடையில் இன்று திமுக அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
“உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள்.. ஏன் தயக்கம்?”- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

இளைஞர் அணி செயலாளர் to துணை முதலமைச்சர்..

முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இளைஞரணிச் செயலாளராக இருந்து பின்னர் அமைச்சராக மாறிய தனது மகன் மு.க.ஸ்டாலினை 2009-ம் ஆண்டு துணை முதல்வராக அறிவித்தார். அதேபாணியில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதியை துணை முதல்வராக அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி
முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதிpt web

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரையில், 1984-ல் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றார், பின்னர் 1989-ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக மாறிய மு.க. ஸ்டாலினை, 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராக பதவி உயர்த்தினார் அப்போதைய முதல்வரான கருணாநிதி.

உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரையில், 2019-ல் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் 2021-ல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றார், தொடர்ந்து 2022-ம் ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியான இன்று துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
“வெற்றிமாறன் சார் என்னை வைத்து தமிழ்படம் பண்ணுங்க..” - நேரடியாக விருப்பம் தெரிவித்த ஜூனியர் NTR!

முக ஸ்டாலின் vs உதயநிதி ஒப்பீடு

முக ஸ்டாலின்:

1983 - திமுக இளைஞரணிச் செயலாளர் (வயது 30)

1989 - ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ (வயது 36)

2006 - உள்ளாட்சித்துறை அமைச்சர் (வயது 53)

2009 - துணை முதலமைச்சர் (வயது 56)

உதயநிதி ஸ்டாலின்:

2019 - திமுக இளைஞரணிச் செயலாளர் (வயது 40)

2021 - சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ (வயது 41)

2022 - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் (வயது 43)

2024 - தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் (வயது 45)

முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
செல்ஃபி எடுத்தபின் மொபைல் நம்பர் கேட்ட பெண் ரசிகை.. நீரஜ் சோப்ரா அளித்த ஸ்மார்ட் ரிப்ளை! #Video

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com