மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை 1993-ம் ஆண்டு தடை செய்யப்பட்டதுடன், 2013-ல் இந்த தடை சட்டமாக இயற்றப்பட்டு பல திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. 2014-ல் உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளும் இச்சட்டத்தை பின்பற்றி சாக்கடை அள்ளும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்வதுடன், அப்பணியில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், கூலி ஆட்களை வைத்து கழிவு சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்துதான் வருகிறது.