உதயநிதி டெல்லி சென்று பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்தது அவரது தாத்தா காலத்து டெக்னிக் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் பாஜகவை, பூத் அளவில் பலப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சக்தி கேந்திர எனும் தமிழக பாஜக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் நடைபெற்ற வருகிறது.
இந்நிலையில் ஆவடியில், சென்னை பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டம் சார்பில் நேற்று பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது... உக்ரைன் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் எரிபொருட்கள் விலை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் எரிபொருள் வி;லை 99.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
கமலின் தற்போதைய செயல்பாடுகள் அவர், முதல்வரின் முதன்மை உடன்பிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தது அவரது தாத்தாவின் டெக்னிக். மோடிக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. மோடி யார் அனுமதி கேட்டாலும் கொடுப்பார்.
தற்போது நீட் தேர்வின் மூலம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டு வாங்கி படிக்கிறார்கள் தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை என திமுகவின் அறிவிப்பு வரும் என தெரிவித்த அவர் தொடர்ந்து... ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறும். ஜனநாயமா? பணநாயகமா? ஏன பொருத்திருந்து பார்ப்போம். துரை வையாபுரி, கே.பாலகிருஷ்ணண்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மார்கெட்டில் விலை போகாதவர்கள். நேற்று நடந்தது பி டீம் மாநாடு இன்று ஏ டீம் மாநாடு நடைபெறும்.
முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது, இன்று வரும் அகில இந்திய தலைவர்கள் எல்லாம் மோடியையும் பாஜகவையும் திட்டிவிட்டு இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு தனி விமானம் பிடித்து போய்விடுவார்கள். ஆனால், மக்கள் எங்கள் பக்கம் வரத் தொடங்கி விட்டார்கள், பட்டியலின மக்கள் எங்கள் கட்சியின் பக்கம் முழுமையாக வரத் தொடங்கிவிட்டார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்ற குழப்பம் காங்கிரஸ் மற்றும் நிதிஷ் குமார் கட்சிகளிடையே எழுந்துள்ளது, ஆட்டுமந்தைகள் மட்டும்தான் தலைவரில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கும், அது ஆட்டு மந்தைகள் கூட்டம். நம்முடையது சிங்கக் கூட்டம் என கூறினார்.