நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பர்தா அணிந்து திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய இடம். எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் இந்தப் பேருந்து நிலையத்தில் இன்று பகல் 1 மணியளவில் இரண்டு பெண் பேருந்தில் இருந்து வந்து இறங்கியுள்ளனர். பின்னர் மக்களோடு மக்களாக இரண்டு பெண்களும் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா ஆடையை அணிந்து வலம் வந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் சந்தேகத்துடன் இரண்டு பெண்களையும் பிடித்து பேருந்து நிலையத்திற்குள் செயல்படும் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் பெண்களிருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். மேலும் பெண்கள் இருவருமே முஸ்லிம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இரண்டு பெண்களையும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.