மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பயிலும் இரு மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கும் சந்தேகத்தின் பெயரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் பல்கலைக்கழகம் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில் மேலும் இதர 247 மாணவர்களுடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.