பொள்ளாச்சி: அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண் காட்டு யானைகள் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார வயரை மிதித்த இரண்டு பெண் யானைகள் உயிரிழந்தன.
யானைகள் மரணம்
யானைகள் மரணம்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: சிவபிரசாத்

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட தேவனூர்புதூர் பருத்தியூர் கிராமத்தில் ஆற்றுப் பாலத்தை அடுத்த சண்முகம் என்பவரது தோட்டத்திற்கு அருகே இரு காட்டு யானைகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வனத்துறையினர்
வனத்துறையினர்pt desk

அங்கு இரு பெண் காட்டு யானைகள் வனப்பகுதியில் கடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே இரு யானைகளையும் பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

யானைகள் மரணம்
கனமழை எதிரொலி | எங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "இரு பெண் யானைகள் இறந்து ஒரு நாள் ஆகி இருக்கலாம் என தெரிய வருகிறது. அவற்றின் வயது, இறப்புக்கான காரணம் உள்ளிட்டவை பிரதே பரிசோதனையின் முடிவுக்குப் பிறகு தெரியவரும். அதன் பிறகு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com