சேற்றில் சடலத்தை சுமந்து செல்லும் கிராம மக்கள் : 50 ஆண்டுகளாக தொடரும் அவலம் 

சேற்றில் சடலத்தை சுமந்து செல்லும் கிராம மக்கள் : 50 ஆண்டுகளாக தொடரும் அவலம் 
சேற்றில் சடலத்தை சுமந்து செல்லும் கிராம மக்கள் : 50 ஆண்டுகளாக தொடரும் அவலம் 
Published on

திருவண்ணாமலை அருகே மருத்துவாம்பாடி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல வழியில்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மருத்துவாம்பாடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காலனிப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு மயானபாதை இல்லாததால் கரடுமுரடான பாதையிலும், மதகு தண்ணீர் செல்லும் கால்வாயிலும், விவசாயநிலத்தில் சாகுபடி செய்துள்ள நெல்வயலில் உள்ள சேற்றில் இறங்கியும் சடலத்தை சுமந்துகொண்டு செல்கின்றனர். இதுப்போன்ற அவலநிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.

இந்நிலையில் மருத்துவாம்பாடி கிராமத்தில் மூதாட்டி சக்குபாய் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவரது சடலத்தை உறவினர்கள் வழக்கம்போல் விவசாய நெல்வயலில் உள்ள சேற்றில் இறங்கி சடலத்தை சுமந்து சென்றனர். 

மயானபாதை அமைத்து தருமாறு பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மயானபாதை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com