விஜய்
விஜய்pt web

நீட் விவகாரம்... “தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” தவெக தலைவர் விஜய்

நீட் தேர்வு விவகாரத்தில், தான் 3 பிரச்னைகளைப் பார்ப்பதாகவும், அதில் தன் வேண்டுகோள் என்ன என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்ற மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் விஜய் உரையாற்றினார். அதில் நீட் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார்.

1. விஜய் பேசுகையில்,

10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய்!
10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய்!

“நீட் குறித்து 3 பிரச்னைகளைப் பார்க்கிறேன், நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. கல்வி மாநிலப்பட்டியலில் இருந்ததை ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்தது. அதுதான் முதல் பிரச்சனை.

2. பன்முகத்தன்மை பலமே

'நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்' - த.வெ.க. தலைவர் விஜய்
'நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்' - த.வெ.க. தலைவர் விஜய்

ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு... இது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது. மாநிலத்திற்கு ஏற்றதுபோல் அந்தப் பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை பலமே தவிர, பலவீனம் அல்ல.. மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, என்சிஇஆர்டியில் தேர்வு வைத்தால் அது எப்படி?

3. நீட் விலக்குதான் ஒரே தீர்வு


#BREAKING | நீட் தேர்வு குளறுபடியால் நம்பகத்தன்மை போய்விட்டது: விஜய்
#BREAKING | நீட் தேர்வு குளறுபடியால் நம்பகத்தன்மை போய்விட்டது: விஜய்

நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்ததாக செய்திகளைப் பார்த்தோம். அதன்பின் நீட் தேர்வின் மேல் மக்கள் மத்தியில் இருந்த நம்பகத்தன்மையே போய்விட்டது. இதற்கெல்லாம் நீட் விலக்குதான் ஒரே தீர்வு.

விஜய்
வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!

நீட் ரத்துகோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக தீர்க்க வேண்டும்.

இதற்கு நிரந்தர தீர்வு கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். அதில் சிக்கல்கள் இருந்தால் சிறப்பு பொதுப்பட்டியல் கொண்டு வந்து, கல்வி சுகாதாரத்தை கொண்டு வரவேண்டும்.

4. நடந்தாலும் அதை நடக்கவிட மாட்டார்கள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்: விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்: விஜய்

இப்போதிருக்கும் பொதுப்பட்டியலில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும், அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு நீட் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்.,

இது என்னுடைய வேண்டுகோள். இது உடனடியாக நடக்காது என்பது தெரியும். அப்படியே நடந்தாலும் அதை நடக்கவிட மாட்டார்கள் என்பதும் தெரியும்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com