”வெற்றி நிச்சயம்” - தவெக கொடியை ஏற்றியப் பின் உரை நிகழ்த்திய விஜய்!

விஜய் கொடியை ஏற்றியப் பின் ”தமிழன் கொடி பறக்குது.. தலைவர் யுகம் பிறக்குது” என்ற தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி பாடலும் வெளியிடப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக்கழகம்முகநூல்
Published on

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை விஜய் ஏற்றிப் பின்னர் ”தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது” என்ற தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி பாடலும் வெளியிடப்பட்டது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில், முதலாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. இதன்பின்னர், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.

இதனையடுத்து, ”விடுதலைக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடி உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றுவேன். சமூக நீதிப்பாதையில் பயணித்து மக்கள் நலனுக்கு கடமையாற்றுவேன்.” என்ற உறுதிமொழியை விஜய் வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

கொடி:

இதனைத்தொடர்ந்து, சிவப்பு , மஞ்சள் வண்ணம் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், மத்தியில் வாகை மலரும் இடம்பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்துவைத்தார். இதன்பின்னர், விஜய், கட்சி தொண்டர்கள் புடைச்சூழ பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் .

கொடி பாடல்:

இதனைத்தொடர்ந்து, ”தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது. மூவெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது . விஜய் கொடி மக்கள் கொடி” என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடலும் வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், ” நம் அனைவருக்கும் இது சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தின் தொடக்கப்புள்ளியாக கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரியில் அறிவித்தேன். அன்றையிலிருந்தே நீங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அது நமது முதல் மாநில மாநாடு.

என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்கள் ஆகிய உங்கள் முன்னிலையிலும் சரி... என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையிலும் சரி.. கொடியை அறிமுகம் செய்வதை நான்மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

இதுவரையில், நாம் நமக்காக உழைத்தோம். இனி வரப்போகும் காலங்களில் கட்சி ரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நான் அனைவரும் ஒன்றோடு இணைந்து உழைப்போம்.

புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு , ஆரவாரம் என்பதைப்போல.. நமது கட்சி கொடியின் பின்பும் ஒரு சுவாரசியமான வரலாறு என்ற உள்ளது. அதுஎன்ன என்பதை, நீங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நாளில் (மாநில மாநாடு) தெரிவிக்கிறேன். கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் என்ன என்பது குறித்தான விளக்கத்தையும் நாங்கள் அன்று தெரிவிக்கிறோம். அதுவரையிலும் மகிழ்ச்சியாக, கெத்தாக நாம் இந்த கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். இது நமது கட்சிக்கான கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை.. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கான கொடியாகத்தான் நான் பார்க்கிறேன்‌.

தமிழக வெற்றிக்கழகம்
தவெக கொடி அறிமுக நாள் | “நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்” - விஜய் அறிவிப்பு!

இந்தத் கொடியை உங்களின் இல்லத்தில் உள்ளத்தில் நான் கூறாமலே... நீங்கள் அதை ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும்.. இருப்பினும், முறையான அனுமதிப்பெற்று, அனைவரிடமும் தோழமை பாராட்டி நாம் இதை ஏற்றிக்கொண்டாடுவோம். அதுவரையிலும், தன்னம்பிக்கையுடன் இருங்கள்!! நல்லதே நடக்கும்!! வெற்றி நிச்சயம்!!! மீண்டும் சந்திக்கும் வரை... நன்றி வணக்கம்.” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com