இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நீர்சத்து குறைவின் காரணமாகவும், சிறுநீரக பிரச்னையாலும் வேல்முருகன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நெய்வேலி தெர்மல் காவல்நிலைய காவல்துறையினர் அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவிரி பிரச்னை தொடர்பான போராட்டத்தின் போது, என்எல்சி அனல்மின்நிலையத்தை முற்றுகையிட்டு வேல்முருகன் போராட்டம் நடத்தினார்.
இதனால் தற்போது அவர்மீது, 124 (ஏ), 153, 153 (ஏ)(1)(பி) மற்றும் 505 (1)(பி) உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிகிச்சை பெற்று வரும் வேல்முருகனை, பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் நெய்வேலி தெர்மல் காவல்நிலைய, காவல் ஆய்வாளர் ராமதாஸ் கைது செய்தார்.