2026-ல் அதிமுக உடன் கூட்டணியா? விளக்கமளித்த தவெக!

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் கூட்டணிக்குறித்து தமிழக வெற்றிக்கழகம் விளக்கமளித்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி - விஜய் - மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - விஜய் - மு.க.ஸ்டாலின்PT Web
Published on

அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், தனது அரசியல் எதிரிகள், கொள்ளை எதிரிகள் யார் என்பது குறித்து பேசியிருந்தார். அத்துடன், ‘எங்களுக்கு எந்த சாயமும் பூசாதீர்கள்’ எனக்கூறனார். மேலும் ‘பிளவுவாத அரசியலை கையில் எடுக்கும் கட்சி’ என பிரதான கட்சிகளான திமுக, பாஜக ஆகியவற்றை நேரடியாகவே விமர்சித்து பேசினார் தவெக தலைவர் விஜய்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இருப்பினும் மற்றொரு பிரதான கட்சியான அதிமுக குறித்து எதுவும் விஜய் கூறவில்லை என்பது விமர்சனத்துக்குள்ளானது. இதனால் “வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு அதிகம்” என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகின. அரசியல் விமர்சகர்களும் இதை வழிமொழிந்தனர்.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், “தலைமை நிலையச் செயலக அறிவிப்பு...

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

எடப்பாடி பழனிசாமி - விஜய் - மு.க.ஸ்டாலின்
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவு!

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

எடப்பாடி பழனிசாமி - விஜய் - மு.க.ஸ்டாலின்
பிரதமருக்கு நைஜீரியாவின் உயரிய விருது.. இதற்கு முன் பிரதமர் பெற்ற உலக நாடுகளின் விருதுகள் என்னென்ன?

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை என்றுதான் தற்போதைய சூழலில் புரிந்துகொள்ள முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com