விஜய்
விஜய்எக்ஸ் தளம்

நெற்றியில் பொட்டில்லாத விஜய்.. பேசுபொருளான புகைப்படம்! திடீர் மாற்றம் ஏன்? தவிர்க்கக் காரணம் என்ன?

தவெக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநாட்டு விஷயங்களையும் தாண்டி, ஒரு விஷயம் கவனிக்கப்பட்டு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.. அது என்ன? விரிவாகப் பார்ப்போம்..
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அதிரடியாக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் விஜய்..,``மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும், ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்'' என வேண்டுகோளும் விடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..,ஆனால், அந்த அறிக்கையில், மாநாட்டு விஷயங்களையும் தாண்டி, ஒரு விஷயம் கவனிக்கப்பட்டு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.. அது என்ன? விரிவாகப் பார்ப்போம்..

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அந்தக் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் கொடி விளக்கம், கொள்கைகள், நிர்வாகிகள் யார் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும் என சொல்லப்பட்டது.. மாநாட்டுக்கு, பல்வேறு மாநில முதல்வர்கள் தொடங்கி பல முக்கிய வி.ஐ.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது. தவிர திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள், எம்.பி, எம்.எல்,ஏ, அமைச்சர்கள் மாநாட்டிலேயே கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது..,

விஜய்
வெளியானது ‘முதல் மாநாடு’ தேதி அறிவிப்பு: “தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக...” - தவெக தலைவர் விஜய்!

மாநாட்டுக்கு மதுரை, சேலம், ஈரோடு, திருச்சி என பல ஊர்களில் இடம் பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியானது..,ஆனால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த,ஆகஸ்ட் 28-ம் தேதி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில், ஏ டி எஸ் பி திருமாலிடம், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், விக்கிரவாண்டி வி சாலையில் உள்ள 150 ஏக்கரில், செபடம்பர் 23-ம் தேதி, மாநாடு நடத்த அனுமதியளிக்கவேண்டும் என மனு அளித்தார்..,ஏ.டி.எஸ்.பி திருமால், துணை சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்..,

தொடர்ந்து, 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அதற்கான அனுமதியை செப்டம்பர் 11-ம் தேதி வழங்கியது..,ஆனால், மாநாட்டுக்கு வெறும் பத்து நாள்கள் இடைவெளி மட்டுமே இருந்ததால், அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்துக்கு மாநாடு தள்ளிப் போகிறது என செய்திகள் வெளியாகின..,அதற்கான அறிவிப்பை விஜய்யே வெளியிடுவார் என்றும் சொல்லப்பட்டது..,அதேபோல, நேற்ரு மாநாட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டார் விஜய்.., அதில்,

``நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும், அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்'' அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..,

விஜய்
பெரியார் திடலில் விஜய்.. குறியீட்டு அரசியலா? தவறான அரசியல் உத்தியா? எழும் 5 கேள்விகள்..

அந்த் அறிக்கையில் உள்ள விஜய்யின் புகைப்படம்தான் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.., முன்பு வெளியாகும் விஜய்யின் அறிக்கையில், அவரின் நெற்றியில் பொட்டுடன் உள்ள புகைப்படம்தான் இருக்கும்..,ஆனால், கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளுக்கு வெளியான அறிக்கையில் இருந்து புகைப்படம் மாறியிருக்கிறது..,இன்று வெளியான புகைப்படத்திலும் நெற்றியில் திலகம் இல்லாத படமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.., அதுவே தற்போது பேசுபொருளாகியிருக்கிறது..,

இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் பேசும்போது..,``நெற்றியில் பொட்டு இருக்கும் புகைப்படம் பயன்படுத்தினால், குறிப்பிட்ட கட்சியை, சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்..,அதுமட்டுமல்ல, ஒருசிலர் நெற்றியில் பொட்டு வைத்து அறிக்கை வெளியிடுகிறார் விஜய்.., ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேங்கிறார் என அதையும் அரசியலாக்கப் பார்க்கிறார்கள்..,அதனால்தான் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காத வகையில், எந்த அடையாளமும் இல்லாத புகைப்படத்தை தலைவர் அறிக்கையில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்’’ என்கிறார்கள்..,

விஜய்
பெரியாருக்கு விஜய் மரியாதை|“திராவிட சாயலை பூசிக் கொண்டார் விஜய்..தேசியத்தோடு வந்தாலாவது..” - தமிழிசை
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com