தவெக மாநில மாநாடு| ’அரசியல் பாம்பை பிடித்து பயமில்லாமல் விளையாடுவோம்’ - விஜய் ஆவேசப் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, கொள்கை பாடலும், கொள்கைத் தலைவர்களும் அறிவிக்கப்பட்ட பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்pt
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் மக்களுக்காக சேவையாற்றும் வகையில் அரசியல் களத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் விஜய்.

கட்சிக்கொடி அறிமுகத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ முதல் அரசியல் மாநாடானது விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று கலைநிகழ்ச்சிகளுடன் தொண்டர்களின் ஆர்ப்பரிப்புடன், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலுடன் மாநாடு தொடங்கியது.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்

கலைநிகழ்ச்சிக்கு பின்னர் உற்சாகமாக மாநாட்டு மேடைக்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். தொடர்ந்து, அங்குள்ள விடுதலைப் போராளிகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிற்கு 100 உயர கம்பத்தில் தன் கட்சிக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தவெகவின் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, கொள்கைப் பாடல் வெளியாகி இருந்தது. அதில் விஜய் பேசிய வசனமும் இருந்தது. இதையடுத்து கட்சியின் கொள்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டன.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு | தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்... கொடியேற்றிய பின் உற்சாகம்!

நான் வரேன்.. கட்சி கொள்கை பாடலில் முழங்கிய விஜய்!

கட்சிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டு, கட்சி கொள்கை பாடல் ஒலிக்கவிடப்பட்டது. அதில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என தொடங்கிய பாடலின் முடிவில் விஜய் பேசும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன.

'உங்களுக்காக உழைக்க நான் வரேன்' - தவெக தலைவர் விஜய்
'உங்களுக்காக உழைக்க நான் வரேன்' - தவெக தலைவர் விஜய்

அதில் பேசிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என கூறிய ஆதியோன் திருவள்ளுவரின் வழியில், நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பார்போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி மத பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு ‘நான் வரேன்’...” என்று உணர்ச்சிமிக்க பேசியுள்ளார்.

தவெக மாநாடு விஜய்
"சமூக நீதிப்பாதையில் பயணித்து சமூக நல சேவகராக கடமையாற்றுவேன்" - தவெக-ன் உறுதிமொழி என்ன?

அரசியலை பாம்போடு ஒப்பிட்ட விஜய்..

தவெக மாநாட்டில் விஜய் உரையாற்றுவதற்கு முன்னர் அவருடைய பெற்றோரிடம் ஆசிவாதம் பெற்றார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் உள்ளிட்டோருக்கு கை கொடுத்தார்.

பின்னர் பேசிய அவர், “ஒரு குழந்தை முதல்முறையாக அம்மா என்று சொல்லும்போது அந்த அம்மாவிற்கு ஒருவித சிலிர்ப்பு வரும் பாருங்கள். அந்த சிலிர்ப்பு எப்படி என்று அந்த அம்மாவைக் கேட்டால் தெளிவாக விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அந்த உணர்வு எப்படி இருந்தது என்று அந்த குழந்தையிடம் கேட்டால், அந்தக் குழந்தை எப்படிச் சொல்லும்? முதலில், அந்தக் குழந்தைக்கு எப்படிச் சொல்லத் தெரியும்? குழந்தையிடம் எது கேட்டாலும் பால் வாசம் மாறாத வாயோடு மழலையாக சிரிக்க மட்டும்தான் தெரியும். அது உணர்ந்த சிலிர்ப்பை, சிலாகிப்பை வார்த்தையில் சொல்வதற்கு அந்தக் குழந்தைக்கு தெரியாது அல்லவா? அப்படி ஓர் உணர்வோடுதான் நான் உங்கள் முன் நிற்கிறேன்.

தவெக
தவெகPT Web

ஆனால், அதேநேரத்தில் அம்மாவிடமும்கூட உணர்வைக்கூட சொல்லத் தெரியாமல் சிரிக்கிற அந்தக் குழந்தைக்கு முன்னாலே ஒரு பாம்பு வந்து படம் எடுக்கிறது என்றால், என்ன நடக்கும்? யார் முன்னாடி வந்து ஒரு பாம்பு நின்றாலும் விழுந்தடித்து ஓடிவிடுவார்கள். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என ஒரு பழமொழியே இங்கே இருக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை என்ன செய்யும் தெரியுமா? தன்னுடைய அம்மாவைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்புடன் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் அந்தப் பாம்பையும் தன் கையில் பிடித்து விளையாடும். அப்போது, அந்தப் பாம்பைக் கண்டால் குழந்தைக்குப் பயமில்லையா என்ற கேள்வியும் வரும். பாச உணர்வே என்னவென்று சொல்லத் தெரியாத அந்தக் குழந்தைக்கு பயம் என்பதை மட்டும் எப்படிச் சொல்லத் தெரியும்? இங்கு, அந்தப் பாம்புதான் அரசியல், அதைக் கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பதுதான் உங்கள் தலைவருடைய வேலை. அரசியலுக்கு நாம் குழந்தைதான். இது, அடுத்தவர்களின் கமெண்ட். ஆனால் பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய கான்ஃபிடண்ட். ஏனெனில் அரசியல் ஒன்றும் சினிமா இல்லையே. டாக்கி பீல்டாயிற்றே. கொஞ்சம் சீரியஸ் இருக்கத்தான் செய்யும்.

தமிழக வெற்றிக் கழக கோட்பாடு!
தமிழக வெற்றிக் கழக கோட்பாடு!

அதனால் பாம்பாக இருந்தாலும் பால்டிக்ஸாக இருந்தாலும் கையில் எடுக்க வேண்டும் என முடிவு செய்ததற்குப் பிறகு, சீரியஸோடும் கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்து செயல்படுவதுதான் நம்முடைய வழி. ஏனெனில், அப்படிச் செயல்பாட்டில் இறங்கினால்தான் இந்த பீல்டில் நிலையாக இருக்க முடியும். ஓர் எனர்ஜியுடனும் இருக்க முடியும். எதிராக இருப்பவர்களை ஒரு டேக் செய்யவும் முடியும். இந்த தாறுமாறா ஆடுகிற ஆட்டம் எல்லாம் இல்லை, தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம்னு சொல்லி சும்மா கூச்சல் எல்லாம் போட முடியாது. கவனமாகத்தான் களமாட வேண்டும்.

தவெக மாநாடு விஜய்
தமிழக வெற்றிக் கழக மாநாடு: ஆர்ப்பரித்த தொண்டர்களின் அன்பு.. கட்சி கொடியை ஏற்றினார் விஜய்!

பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் இறங்கி அடிக்கனும்..

நம்முடைய அரசியல் கொள்கை கோட்பாடுகளில் சமரசத்துக்கோ சண்டை நிறுத்தத்திற்கோ எப்போதும் இடமில்லை. அதற்காக இந்த வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப் போவதில்லை. எதை நினைத்து அரசியலுக்கு வந்திருக்கிறமோ, அதைக் கொஞ்சமும் பிசிறி இல்லாமல் செய்யப்போகிறோம். அதுவரை நெருப்பாகத்தான் இருப்போம். இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதற்கு? நடித்தோமா, நாலு காசு சம்பாதித்தோமா என இருக்கலாம் என்றுதான் நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், நாம் மட்டும் நன்றாக இருக்கிறோம் எனச் சொல்வது சுயநலமில்லையா? நம்மை வாழவைத்த மக்களுக்கு நாம் ஏதும் செய்யாமல் இருப்பது நல்ல விசுவாசமா இருக்குமா? ஒர் அளவுக்கு மேலே காசு சேர்த்து என்ன செய்யப்போகிறோம்? நம் இந்த வாழ்க்கையை கொடுத்த இந்த மக்களுக்கு என்னதான் செய்யப்போகிறோம்? இப்படியெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் என் மனதுக்குள் வந்துகொண்டே இருந்தது.

இப்படி ஒட்டுமொத்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒட்டுமொத்தமாக விடையைக் கண்டுபிடிக்க யோசித்தபோதுதான் அரசியல் என ஒரு விடை கிடைத்தது.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்pt

சரி, இந்த அரசியல் எப்படிப்பட்டது? நம்மால் கையாள முடியுமா? அது நம் இயல்புக்கு செட் ஆகுமா? இப்படி நிறைய கேள்விகள் அதிகம் வந்துகொண்டே இருந்தது. இப்படி எல்லாவற்றையும் பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக் கொண்டால் எதையும் செய்ய முடியாது. சில விஷயங்களில் பின்விளைவுகளை யோசிக்காமல் இறங்கி அடித்தால்தான் நம்மை நம்புகிறவர்களுக்கு நல்லது நடக்கும் என்று தோன்றியது. அதுதான் இறங்கியாச்சு. இனி எதைப் பற்றியும் கவலைபடக் கூடாது. இனி எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடியிலும் யோசனையும் நிதானமும் இருக்க வேண்டும் என முடிவுதான் செய்து வந்திருக்கிறோம்.” என்றார்.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு| பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க.. உங்களுக்காக ’நான் வரேன்.’ முழங்கிய விஜய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com