”சமூக நல்லிணக்கம் பேணியவர்; இந்திய விடுதலைக்காக..“ - தேவர் ஜெயந்திக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தியை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார் த.வெ.க தலைவர்.
தேவர் ஜெயந்தி - த.வெ.க தலைவர் விஜய்
தேவர் ஜெயந்தி - த.வெ.க தலைவர் விஜய்முகநூல்
Published on

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தியை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார் த.வெ.க தலைவர் விஜய்.

திராவிட மாடலை எதிர்க்கிறோம், மதப்பிரிவினைவாத அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட முக்கிய கொள்கைகளை அறிவித்து, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி சாலையில் நடைப்பெற்றது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அக்கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு பிறகு விஜய்யின் கொள்ளை மற்றும் பேச்சுக்குறித்தான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போது டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறியிருக்கிறார் விஜய்.

இந்தநிலையில், இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தி கொண்டாடப்படும் சூழலில், தவெக தலைவர் விஜய் இதற்கு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேவர் ஜெயந்தி - த.வெ.க தலைவர் விஜய்
”இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்..” - கட்சி தோழர்களுக்கு தவெக தலைவர் விஜய் நன்றி அறிக்கை!

அதில், ”அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com