“டாஸ்மாக் அருகே வாகனங்களை நிறுத்தக்கூடாது; மது அருந்திவிட்டு வரக் கூடாது”-தொண்டர்களுக்கு தலைமை கரார்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வரும் எந்த வாகனத்தையும் டாஸ்மாக் அருகே நிறுத்த கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைமை அறிவுரை வழங்கியுள்ளது.
விஜய் மாநாடு
விஜய் மாநாடுpt web
Published on

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி. சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக 280 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநாடு
மாநாடுபுதியதலைமுறை

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே பல அறிக்கைகளை வெளியிட்டு அறிவுறுத்தி இருந்தார். இன்று கூட எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், “மாநாட்டுக்கு வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

விஜய் மாநாடு
”எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை” - வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் கடிதம்!

இந்நிலையில், மாநாடுக்கு மக்களை அழைத்து வரும் எந்த ஒரு வாகனத்தையும் டாஸ்மாக் அருகே நிறுத்த கூடாது என்றும் மது அருந்திவிட்டு வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் மது அருந்த கூடாது என மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இது மட்டும் இல்லாமல் மாநாடு திடலுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கட்சியின் தன்னார்வலர்களை நிறுத்தி கண்காணிக்கவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

விஜய் மாநாடு
ரெண்டே பேரு.. இரண்டு போட்டியில் 39 விக்கெட்டுகள்! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com