“மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” - தவெக பாடல் வரிகள் சொல்லும் வரலாறு என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கும் விஜய், கட்சிக்கான பாடலையும் வெளியிட்டுள்ளார். அதன் வரிகள் சொல்லும் வரலாறு என்ன? விரிவாகப் பார்க்கலாம்...!
தவெக பாடல் வரிகள்
தவெக பாடல் வரிகள்புதிய தலைமுறை
Published on

22செய்தியாளர்: புனிதா பாலாஜி.

வெற்றிக் களிப்பில் பிளிறும் இரட்டை யானை... அதற்கு இடையே 28 நட்சத்திரங்கள் சூழ்ந்த வாகை மலர்.... சிவப்பு மஞ்சள் நிறத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார், விஜய். கூடுதல் சிறப்பாக கட்சி கொடிக்கான பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜயை புகழ்ந்து பல ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நேரடி அரசியலில் இறங்கியபின் வெளியாகும் முதல் அரசியல் பாடல் இதுதான்.

தமிழன் கொடி பறக்குது...

தலைவன் யுகம் பொறக்குது” எனத் தொடங்கும் இப்பாடலில்,

”மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது”

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இது, முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணாவையும், எம்.ஜி. ராமச்சந்திரனை குறிப்பிடுகிறது. அண்ணா தமிழக அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்தியவர். எம்.ஜி.ஆர் சினிமாவிலும், அரசியலிலும் சாதனைகளைச் செய்தவர். மூன்றெழுத்தில் அழைக்கப்பட்ட அண்ணாவும், எம்.ஜி.ஆரும் இன்று நம்முடன் இல்லை. அதனால், மூன்றெழுத்து மந்திரம் மீண்டும் ஒலிக்கும் காலமிது என்ற வரிகள், விஜயையே குறிப்பிடுகிறது.

”சிகரம் கிடைத்த பின்பும் இறங்கி வந்து சேவை செய்து, மக்களுக்கு நன்றி செலுத்தும் காலமிது”

என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன. ‘சினிமாவில் தனக்கு கிடைத்த சிகரம், தமிழக மக்கள் கொடுத்த வெற்றியால் கிடைத்தது. அந்த வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, விஜய் தன் சிகரத்தையே விட்டு வருகிறார்’ எனக் கூறுகிறது இப்பாடல் வரிகள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

பாடலின் இரண்டாம் பாதியில், கட்சிக் கொடி குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ”ரத்த செவப்பில் நெறமெடுத்தோம்.. ரெட்ட யானை பலம் கொடுத்தோம்... மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்... பச்சை நீலம் திலகம் வச்சோம்...” என்று கொடியில் இருக்கும் வண்ணங்கள் வரிகளாக்கப்பட்டு இருக்கின்றன. வெற்றியின் அடையாளமான வாகை மலர், கொடியின் நடுவே இடம்பெற்றுள்ளது. போரில் வெற்றி பெற்றுத் திரும்பும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் வாகை மலர், சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது.

தவெக பாடல் வரிகள்
விஜய் கொடியின் வரலாறு இதுதான்... வெளியான பிரத்யேக தகவல்கள்!

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இறுதியில் ஒரு வரி இடம்பெற்றுள்ளது... ”அரசர கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி... அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி” என அதிகாரத்துக்கு சவால் விடும் வரிகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும், பேரறிஞர் அண்ணாவும் நிழலுருவில் தோன்றுகிறார்கள்.

அவர்களுக்கு நடுவே கை அசைத்தபடி நிற்கிறார், விஜய்..

இது, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்த குறியீடாக இருக்கலாம் என பேசப்படுகிறது. பாடலில் வரும் கிராஃபிக்ஸ் மூலம் காட்சிகள், கருத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என மும்மதத்தைச் சேர்ந்தவர்கள் கொடியை ஏந்தி நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதோடு, ”மூத்தகுடியை காக்கும் குடி” என்ற வரிகளின் மூலம் மத நல்லிணக்கமும், சமூக ஒற்றுமையுமே தனது பாதை என தெளிவுபடுத்தி இருக்கிறார், விஜய். கட்சி பாடலுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அவருக்கு தேர்தலில் ஓட்டு கிடைக்குமா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

தவெக பாடல் வரிகள்
”வெற்றி நிச்சயம்” - தவெக கொடியை ஏற்றியப் பின் உரை நிகழ்த்திய விஜய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com