மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் விவிஐபி பாதுகாப்பு நிறுவனம், மாநாடு பாதுகாப்பு வேலைகளுக்காக தவெகவுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநாடு திடலில் எப்படி அமர வைப்பது, கூட்ட நெரிசலை எப்படி தவிர்ப்பது, உணவு வழங்குவது உள்ளிட்டவை குறித்த விரிவான திட்டத்தை, விவிஐபி பாதுகாப்பு நிறுவனம் வழங்கியிருக்கிறது.
7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை, மாநாடு ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபடுத்த தவெக திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சியை இந்த நிறுவனம் வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் 100 மருத்துவர்கள், 200 துணை மருத்துவர்களை பணியில் அமர்த்தவும், மாநாட்டு திடல் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் டேங்க் வைக்கவும் தமிழக வெற்றிக்கழகம் முடிவெடுத்துள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.