தூத்துக்குடி, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி பாதிப்பு
Published on

தூத்துக்குடி, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பது மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தூத்துக்குடி, வல்லூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி குறைவாக உள்ளதால் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 2-ஆவது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. அதே நேரத்தில், நெல்லை மாவட்டம் பணகுடி, பழவூர், காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் மூலம் 3 ஆயிரத்து 427 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் மின்வெட்டு படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com