ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்!
Published on

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆலைக்கு சீல் வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். 

இந்தச் சூழலில் தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அதற்கு சீல் வைத்தார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக நோட்டீஸும், ஆலையின் கதவில் ஒட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com