தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்துக்கு சம்மன் ?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்துக்கு சம்மன் ?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்துக்கு சம்மன் ?
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அருணா ஜெகதீசன் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் குழு விசாரித்து வருகிறது.

இக்குழுவின் விசாரணை காலம், 3-வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு, தேவைப்பட்டால் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com