மதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு

மதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு
மதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு
Published on

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்க பள்ளம் தோண்டியபோது, பழமையான பாதாள சிறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் அருகே, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 30 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு திடீரென 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் வெளிப்பட்டதால் தொழிலாளர்கள் குழப்பமடைந் தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அது பாதாள சிறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

தற்போது வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடம், ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலையாக இருந்ததாக தெரிவிக் கப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பேருந்து அருகே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டியபோது, அங்கு சுரங் கம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மாநகராட்சி ஊழியர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com